தண்டோரா கண்ணால பாடல் வரிகள் தமிழில்
திரைப்படம் : கடைக்குட்டி சிங்கம்
பாடல் : தண்டோரா கண்ணால
பாடகர்கள் : பிரசன்னா
பாடலாசிரியர் : யுகபாரதி
இசை : இமான்
தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முறை நான் பார்த்தாலும் பத்தல என பேசும் வாய்
சக்கர மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சு பாய்
உள்ளம் துடிக்குதே உள்ளத வந்து ஆராயி
தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ
பொட்டு வச்ச பொண்ணு சுத்தி அடிக்குது
கொட்ட முத்து கொன்னு
வட்டம் கட்டி நின்னு கும்மி அடிக்குது சொல்லு இரண்டில் ஒன்னு
கிழக்கால தானே வரும் சூரியன் என நானும் கூட நெனச்சேன்
எகத்தாளம் பேசும் மகராசி உன் முகம் பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னமோ போடி உன்னையே தாடி வெட்கம் முளைக்குதடி நெஞ்சு பறக்குதடி
தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ
செங்க கல்லும் உன்ன கண்ட நொடியில தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன கன்னக்குழியில மென்னு நல்லா தின்ன
புலி மேல பாய துணிஞ்சாலுமே மிரளாத ஆள கவுத்த
சிரிப்பாள ஏண்டி மயில் தோகயை வயர் கூடையாட்டம் எழுத்த
வள்ளலா வாடி அள்ளியே போடி வண்டி நொடிக்குதடி நொண்டி அடிக்குதடி
தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முறை நான் பார்த்தாலும் பத்தல என பேசும் வாய்
சக்கர மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சு பாய்
உள்ளம் துடிக்குதே உள்ளத வந்து ஆராயி
தண்டோரா...
0 கருத்துகள்