திரைப்படம் : அசுரவதம்
பாடல் : என் உயிரே
பாடகர் : அனந்து
இசை : கோவிந் வசந்தா
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஏன் சிதைந்ந்தாய்
அன்பே கூறாமலே
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை
இதோ நான் துணை துணை

ஏன் சிதைந்ந்தாய்
அன்பே கூறாமலே

தூர பறக்கும் என் வாழ்வின்
வேர்கள் அனைத்தும் நீ தான்
காட்டில் தொலைந்தே நான் போவேன்
நீதானே கூட்டின் நிழலாய்
காலந்தோறும் காவல் காப்பாய்
உந்தன் கண்ணீரை மறைத்திருப்பாய்
சோர்ந்து போகும் என்னை தேற்றி
பாரம் யாவும் சுமப்பாய்

என் உயிரே ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே...
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை
இதோ நான் துனை துனை

வீட்டில் நுழைந்ந்தால் உன் பார்வை
காயம் அனைத்தும் போக்கும்
சேயை வளர்க்கும் உன் பாசம்
என் தாயை காட்டி போகும்
பாரம் யாவும் தாங்கும் தாரம்
தன்னையே தானும் மறந்தாலே
தூறல் போல பேசும் கண்ணே
பேரைக்கூட மறந்தாய்

ஏய் விதியே ஏன் சிதைந்தாய்
ஐயோ என் சாமியை
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே என்னை
இதோ நான் துணை துணை

கருத்துரையிடுக

0 கருத்துகள்